IPL 2026 | எம்.எஸ். தோனி அணி விவாதங்களில் கூட கலந்து கொள்வது கிடையாது: ருதுராஜ் கெய்க்வாட்

அணி விவாதம் உள்ளிட்ட அனைத்திலும் இருந்து எம்.எஸ். தோனி ஒதுங்கிக் கொண்டார் என ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்
IPL 2026 | எம்.எஸ். தோனி அணி விவாதங்களில் கூட கலந்து கொள்வது கிடையாது: ருதுராஜ் கெய்க்வாட்
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அசைக்க முடியாத வீரராக எம்.எஸ். தோனி திகழ்ந்து வருகிறார். கேப்டன் பதவியில் இருந்து விலகி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடி வந்தாலும், அவருக்காகவே சி.எஸ்.கே. போட்டியை பார்க்க ரசிகர்கள் குவிகிறார்கள்.

கேப்டனாக இல்லை என்றாலும், முக்கிய முடிவுகளை எடுப்பது, கேப்டன்களுக்கு ஆலோசனை வழங்குவது போன்றவற்றில் ஈடுபடுகிறார். நிழல் கேப்டனாக செயல்படுகிறார் என்றெல்லாம் சொல்வது உண்டு.

இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில் "எம்.எஸ். தோனி அணி விவாதத்தில் கூட கலந்து கொள்வது கிடையாது. அவர் என்னிடம், என்னுடைய ஆலோசனைகளை கேட்டாலும், அதன் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றார். அவர் முற்றிலும் ஒதுங்கிக் கொண்டார்" எனத் தெரிவித்தார்.

நாளை கவுகாத்தியில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com