

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சிஎஸ்கே- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் சிஎஸ்கே 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட ஓவர்களை வீசி முடிக்கவில்லை. இதனால் அணி கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு 12 லட்சம் ரூபா்ய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரின் முதன்முறையாக சிஎஸ்கே அணி பந்து வீச்சில் அதிக நேரம் எடுத்துக் கொண்டுள்ளது.
சிஎஸ்கே அடுத்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி நாளைமறுதினம் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.