

ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் 4 போட்டிகளில் விளையாடி புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளன.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை 18 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. ஒரு போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
அதன்பின் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் சிஎஸ்கே அணி 23 ரன்களில் வெற்றி பெற்றது.
இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் தாங்கள் மோதிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளன. ஆர்சிபி அணி, டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் தலா இரு வெற்றி பெற்று 3, 4, 5-வது இடத்தில் உள்ளது.
தலா ஒரு வெற்றி பெற்றுள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் முறையே 6வதௌ முதல் 9வது இடம் பிடித்துள்ளது.
இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காத கொல்கத்தா நைட் ரைடர்ஸ் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.