

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அணிகளுக்கு இடையிலான மோதல் ஒருபுறம் இருக்க, வீரர்களுக்கு இடையிலான தனிப்பட்ட சாதனைகளுக்கான போட்டி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 214 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய குஜராத் அணி 219 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில், அதிக விக்கெட் வீழ்த்தியோருக்கான பர்பிள் கேப் பட்டியலில் குஜராத்தின் ரபாடா முதலிடத்துக்கு முன்னேறினார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிராக அவர் எடுத்த 2 விக்கெட்டையும் சேர்த்து, ரபாடா 16 போட்டிகளில் 28 விக்கெட்டுகளுடன் முதல் இடம் பிடித்தார்.
அடுத்த இடத்தில் புவனேஷ்குமார் உள்ளார். அவர் 15 போட்டிகளில் 26 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.