ஐபிஎல் 2026: கோலியுடனான நட்பு குறித்து மனம் திறந்த பஞ்சாப் வீரர்

ஐபிஎல் தொடரின் போது விராட் கோலி உடனான கலகலப்பான உரையாடல் குறித்து பிரார் மனம் திறந்து பேசியுள்ளார்.
ஐபிஎல் 2026: கோலியுடனான நட்பு குறித்து மனம் திறந்த பஞ்சாப் வீரர்
Published on

ஐபிஎல் 2025 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்ப்ரீத் பிரார் மற்றும் விராட் கோலி இடையேயான கலகலப்பான உரையாடல் குறித்து பிரார் மனம் திறந்து பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

விராட் கோலி பாயியுடன் மைதானத்தில் இது போன்ற கிண்டல்கள் செய்வது சாதாரணமானது. அவர் எங்களுடன் எப்போதும் வேடிக்கையாகப் பேசி உற்சாகப்படுத்துவார். ஐபிஎல் தொடரில் எனது முதல் விக்கெட்டே விராட் கோலி தான் (2021-ல்). அதை எனது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளிடம் பெருமையாகச் சொல்லிக் கொள்வேன். அவரது விக்கெட்டை வீழ்த்துவது எனக்கு ஒரு பெரிய சாதனை என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் 2024 ஐபிஎல் சீசனின் போதும், ஹர்ப்ரீத் பிரார் மிக வேகமாகப் பந்து வீச வந்தபோது, கோலி அவரிடம் "கொஞ்சம் மூச்சு விட விடுப்பா என்று பஞ்சாபி ஸ்டைலில் கிண்டல் செய்த வீடியோவும் அப்போது வைரலானது குறிப்பிடத்தக்கது.

தற்போது மார்ச் 2026-ல் மீண்டும் இந்த இரு வீரர்களும் மோதவுள்ள நிலையில், இவர்களது நட்பு கலந்த போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com