IPL 2026 | 13 ஆண்டுகளுக்கு பிறகு தனது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி

ஐபிஎல் தொடரில் 13 ஆண்டுகளுக்கு பிறகு தனது முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
MUMBAI INDIANS
MUMBAI INDIANS
Published on

ஐ.பி.எல். தொடரின் 2வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின.இப்போட்டியில் முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 220 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் ஐபிஎல் தொடரில் 13 ஆண்டுகளுக்கு பிறகு தனது முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது

கடைசியாக 2012ல் நடந்த தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றியிருந்தது. இதன்மூலம் 13 ஆண்டு கால சோகத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணி முடிவு கட்டியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com