

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தோள்பட்டை மற்றும் முழங்கை காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரின் போட்டிகளில் இதுவரை விளையாடவில்லை.
ஆஸ்திரேலிய கோடைக்கால போட்டிகளின்போது ஏற்பட்ட காயங்களுக்காக அவர் தற்போது தாயகத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் மிட்செல் ஸ்டார்க்கிற்குப் பதிலாக லுங்கி நிகிடி பந்துவீச்சில் முக்கியப் பங்காற்றி வருகிறார்.
இந்நிலையில், மிட்செல் ஸ்டார்க் உடல் தகுதி அடைந்து விட்டதால் ஐ.பி.எல். தொடரில் ஆடலாம் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ள அறிக்கையில், மிட்செல் ஸ்டார்க் முழு உடல் தகுதி பெற்றுள்ளார். மே 1-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்தது.