IPL 2026 | ராமகிருஷ்ணா கோஷுக்கு பதில் சிஎஸ்கேவில் இணைந்த புதிய வீரர்

காயம் காரணமாக ராமகிருஷ்ணா கோஷ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.
IPL 2026 | ராமகிருஷ்ணா கோஷுக்கு பதில் சிஎஸ்கேவில் இணைந்த புதிய வீரர்
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த சில வீரர்கள் 2026 ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்னதாகவே காயத்தால் வெளியேறினர். மேலும், ஆயுஷ் மாத்ரே விலகியது அணிக்கு மிகப்பெரிய இழப்பாகப் பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, மும்பை அணிக்கு எதிராக சிஎஸ்கே அணியில் அறிமுகம் ஆன ராமகிருஷ்ணா கோஷ் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார்.

மும்பைக்கு எதிரான இவர் சிறப்பாக பந்து வீசி 3 ஓவரில் 24 ரன் விட்டுக்கொடுத்து சூர்யகுமாயர் யாதவ் விக்கெட்டை சாய்த்தார்.

இந்நிலையில், ராமகிருஷ்ணா கோஷுக்கு பதிலாக மெக்னில் நரோனா சிஎஸ்கே அணியில் இடம்பிடித்துள்ளார்.

கர்நாடகாவை சேர்ந்த ஆல் ரவுண்டரான இவர், சி.கே.நாயுடு கோப்பைக்கான தொடரில் அதிக ரன்கள் அடித்து நமன் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிஎஸ்கே அணியில் ஏற்கனவே நாதன் எல்லீஸ் ஐபிஎல் தொடர் முழுவதிலும் இருந்து விலகினார். ஸ்பென்சர் ஜான்சன் முதல் பாதி போட்டிகளில் விளையாடவில்லை. எம்.எஸ்.தோனி இதுவரை விளையாடாமல் உள்ளார். கலீல் அகமது, ஆயுஷ் மாத்ரே ஆகியோர் காயத்தால் விலகினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com