சி.எஸ்.கே. அணிக்கு பின்னடைவு: ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டன் காயத்தால் விலகல்

ஜேமி ஓவர்டன் 10 போட்டிகளில் விளையாடி 136 ரன் எடுத்துள்ளார்.
சி.எஸ்.கே. அணிக்கு பின்னடைவு: ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டன் காயத்தால் விலகல்
Published on

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி 6ல் வெற்றி பெற்று 12புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான ஜேமி ஓவர்டன் வலது தொடை பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவர் சிகிச்சைக்காக லண்டன் திரும்ப உள்ளார்.

இதை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரது விலகல் சி.எஸ்.கே. அணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

ஜேமி ஓவர்டன் 10 போட்டிகளில் விளையாடி 136 ரன் எடுத்துள்ளார். 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com