

ஐ.பி.எல். 2026-ன் லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஆர்.சி.பி. முதல் அணியாக பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில் மற்ற 3 இடங்களுக்கு பலத்த போட்டி நிலவி வருகிறது.
இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், சி.எஸ்.கே. அணிகளும் உள்ளன. சன்ரைசர்ஸ் ஐதராபாத் 12 போட்டிகளில் 7-ல் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. சி.எஸ்.கே. 12 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.
இரு அணிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி பெற்றால், 13 வெற்றிகளுடன் ஏறக்குறைய பிளேஆஃப் சுற்றை உறுதி செய்யும். இல்லையெனில் கடைசி போட்டியில் ஆர்.சி.பி.-ஐ கட்டாயம் வீழ்த்தியே ஆக வேண்டும்.
அதேவேளையில் இன்று சி.எஸ்.கே. தோல்வியடைந்தால் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு மங்கிவிடும். கடைசி போட்டியில் குஜராத்தை வீழ்த்தி 7 வெற்றிகளுடன் வாய்ப்புள்ளதா? என காத்திருக்க வேண்டும். ஆகவே, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் சி.எஸ்.கே. உள்ளது.
சொந்த மைதானத்தில் போட்டி நடைபெறுவதால் அதை சிஎஸ்கே தனதாக்கிக் கொள்ள முனைப்பு காட்டும். ஓவர்டன் அணியில் இல்லாதது பெரிய இழப்பாகும். பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட், சாம்சன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.