IPL 2025 | ஐபிஎல் இன்று தொடக்கம்: கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்

19-வது சீசன் ஐபிஎல் தொடரை சிறப்பிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் வெளியிட்டது.
IPL 2025 | ஐபிஎல் இன்று தொடக்கம்: கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்
Published on

சென்னை:

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கி மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இன்று இரவு பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்சை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், ஐபிஎல் தொடரை சிறப்பிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் வெளியிட்டது. அது ஐபிஎல் கிரிக்கெட்டை குறிப்பிடும் வகையில் அமைந்திருக்கிறது. அதில் கிரிக்கெட் ஸ்டம்புகள், பந்து மற்றும் நியான் நிற பின்னணியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை கிளிக் செய்வதன் மூலம் ஐபிஎல் குறித்த நேரடி தகவல்களை பெற முடியும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com