கடந்த 5 ஆண்டுகளில் சேஸிங்கில் சி.எஸ்.கே. மிகவும் மோசம்: புள்ளி விவரம் சொல்வது என்ன? | IPL 2026

பவர்பிளேயில் 76 ரன்கள் குவித்தும், மிடில் ஓவர்களில் சொதப்பியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியை சந்தித்தது.
கடந்த 5 ஆண்டுகளில் சேஸிங்கில் சி.எஸ்.கே. மிகவும் மோசம்: புள்ளி விவரம் சொல்வது என்ன? | IPL 2026
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய ஐதராபாத் 194 ரன்கள் சேர்த்தது. பின்னர் 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சி.எஸ்.கே. களம் இறங்கியது. ஒரு கட்டத்தில் பவர்பிளேயில் 3 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் குவித்திருந்தது. அதன்பின் சிஎஸ்கே-வால் ரன்கள் அடிக்கமுடியவில்லை. இதனால் 184 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

2020-க்கும் பிறகு சிஎஸ்கே-வுக்கு சேஸிங் என்றாலே ஜுரம்தான் என்பது தெரியவந்துள்ளது. 2020-ல் இருந்து 18 போட்டிகளில் 175 ரன்களுக்கு மேலான சேஸிங்கை துரத்தியுள்ளார். ஆனால், இதில் 16 முறை சேஸிங் செய்ய முடியாமல் தோல்வியைத்தான் சந்தித்துள்ளது. 2 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 175 ரன்களுக்கு மேல் டார்கெட் நிர்ணயித்தால் சி.எஸ்.கே. திணறி வருகிறது என்பது தெளிவாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com