

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் 13 போட்டிகளில் விளையாடி 7 வெற்றியுடன் 14 புள்ளிகள் பெற்று 4வது இடத்தில் உள்ளது.
நாளை மும்பையுடன் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் கட்டாய வெற்றி பெற்றால் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
ராஜஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் ரவி சிங் காயம் காரணமாக விலகியுள்ளார்.
இந்நிலையில், ரவி சிங்குக்கு பதிலாக ஆல் ரவுண்டரான எமான்ஜோத் சஹல் ராஜஸ்தான் அணியுடன் இணைய உள்ளார் என அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.