

புதுடெல்லி:
10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவில் இன்று (சனிக்கிழமை) இரு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது.
இதில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா அணியில் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் மும்பை அணியை வழிநடத்துவார். இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.