

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த சில வீரர்கள் 2026 ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்னதாகவே காயத்தால் வெளியேறினர். மேலும், ஆயுஷ் மாத்ரே விலகியது அணிக்கு மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் நேற்று மும்பை அணிக்கு எதிராக சிஎஸ்கே அணியில் அறிமுகம் ஆன ராமகிருஷ்ண கோஷ் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சிய போட்டியில் விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இவர் நேற்றைய போட்டியில் சிறப்பாக பந்து வீசி 3 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சூர்யகுமாயர் யாதவ் விக்கெட்டை சாய்த்தார். இந்த தொடர் முழுவதும் அணியில் இடம் பிடித்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காயத்தால் ஒரே போட்டியுடன் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, நாதன் எல்லீஸ் ஐபிஎல் தொடர் முழுவதிலும் இருந்து விலகினார். ஸ்பென்சர் ஜான்சன் முதல் பாதி போட்டிகளில் விளையாடவில்லை. எம்.எஸ். தோனி இதுவரை விளையாடாமல் உள்ளார. டெவால்டு பிரேவிஸ் முதல் 3 போட்டிகளிலும் விளையாடவில்லை.
கலீல் அகமது, ஆயுஷ் மாத்ரே காயத்தால் விலகியுள்ளார். தற்போது ராமகிருஷ்ண கோஷ் இந்த வரிசையில் இணைந்துள்ளார்.