

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை 66 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. நேற்று அகமதாபாத்தில் நடந்த 66-வது லீக் போட்டியில் குஜராத், சென்னை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி 229 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சென்னை 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் சிஎஸ்கே அணியின் பிளே ஆப் கனவு தகர்ந்தது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 14 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 8 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக லீக் சுற்றுடன் வெளியேறியது. ஏற்கனவே 2020, 2022, 2024, 2025 ஐபிஎல் தொடரிலும் லீக் சுற்றுடன் வெளியேறியது.
2010, 2011, 2018, 2021, 2023 ஆகிய 5 ஐபிஎல் தொடர்களில் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வென்றது.
சிஎஸ்கே அணி 2008, 2012, 2013, 2015, 2019 ஆகிய 5 ஐபிஎல் தொடர்களில் இறுதிப்போட்டி வரை சென்று 2வது இடம் பிடித்தது.
2009-ம் ஆண்டில் அரையிறுதியில் தோல்வி அடைந்தது.
2014-ம் ஆண்டில் பிளே ஆப் சுற்றில் தோல்வி அடைந்தது.