தொடர் தோல்வி எதிரொலி: புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து மீளாத சி.எஸ்.கே.

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்துக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
தொடர் தோல்வி எதிரொலி: புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து மீளாத சி.எஸ்.கே.
Published on

சென்னை:

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 43-வது லீக் ஆட்டம் சேப்பாக்கத்தில் நேற்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த சென்னை அணி 19.5 ஓவரில் 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஐதராபாத் அணியின் ஹர்ஷல் படேல் அசத்தலாகப் பந்து வீசி 4 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து ஆடிய ஐதராபாத் அணி 18.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடரில் தொடர் தோல்வியின் எதிரொலியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலேயே நீடித்து வருகிறது.

குஜராத் முதல் இடத்திலும், டெல்லி 2வது இடத்திலும், பெங்களூரு 3வது இடத்திலும், மும்பை அணி 4வது இடத்திலும் நீடித்து வருகின்றனர்.

பஞ்சாப் 5வது இடத்திலும், லக்னோ 6வது இடத்திலும், கொல்கத்தா 7வது இடத்திலும், ஐதராபாத் 8வது இடத்திலும், ராஜஸ்தான் 9வது இடத்திலும் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com