மைதானத்தில் கண்கலங்கிய ப்ரீத்தி ஜிந்தா! ஆறுதல் சொன்ன கேப்டன் ஸ்ரேயாஸ்

நான் உள்பட முக்கிய பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தது தோல்விக்கான காரணம் என ஸ்ரேயாஸ் பேட்டி.
மைதானத்தில் கண்கலங்கிய ப்ரீத்தி ஜிந்தா! ஆறுதல் சொன்ன கேப்டன் ஸ்ரேயாஸ்
Published on

ஹிமாச்சலில் உள்ள தர்மசாலா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில், 23 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் தோல்வியடைந்தது.

இதையடுத்து பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தாவுடன், கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் மைதானத்தில் பேசிக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

போட்டிக்கு பின்பு பேசிய கேப்டன் ஸ்ரேயாஸ், “பந்துவீச்சில் எங்களால் அவ்வளவாக விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை. இருந்தபோதிலும் 222 ரன்களில் ஆர்.சி.பி அணியை சுருட்டியது பாராட்டத்தக்க செயல்பாடாகவே நான் நினைக்கிறேன்.

பவர்பிளேயில் சிறப்பான தொடக்கத்தை கொடுக்கும் பிரப்சிம்ரன் மற்றும் பிரியன்ஷ், இந்த முறை ரன்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். நான் களமிறங்கி சீக்கிரமே ஆட்டமிழந்ததும் தோல்விக்கான ஒரு காரணம்.

முடிவுகளை பொருட்படுத்தாமல் நான் எப்பொழுதும் நேர்மறையாகவே இருப்பேன். நாளை மீண்டும் சூரிய உதயத்தை காணப்போகிறேன்” என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com