IPL 2026 | இதுவரை எந்த சி.எஸ்.கே. வீரரும் செய்ததில்லை... அசத்தல் சாதனை படைத்த சஞ்சு சாமசன்

எந்த சி.எஸ்.கே வீரரும் படைக்காத சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.
IPL 2026 | இதுவரை எந்த சி.எஸ்.கே. வீரரும் செய்ததில்லை... அசத்தல் சாதனை படைத்த சஞ்சு சாமசன்
Published on

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 33-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 103 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நேற்றிரவு நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி பேட்டிங் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த சஞ்சு சாம்சன் அதரடியாக ஆடி சதம் விளாசினார். இதன் மூலம் அவர் இதுவரை எந்த சி.எஸ்.கே வீரரும் படைக்காத சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.

நேற்றை போட்டியில் தொடக்கம் முதலே நிதானமாக ஆடிய சஞ்சு சாம்சன் 54 பந்துகளில் 10 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் 101 ரன்களை விளாசினார்.

இந்த சதம் மூலம், ஐ.பி.எல். வரலாற்றிலேயே முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சதம் விளாசிய முதல் சி.எஸ்.கே. வீரர் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றார்.

நடப்பு ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் தொடரில் சஞ்சு சாம்சன் விளாசிய இரம்டாவது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சம்சன் சதமவிளாசி இருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com