இத்தனை கோடியா?.. ஐபிஎல் 2026 தொடரில் வழங்கப்பட்ட பரிசுத்தொகை விவரம்

இந்த அரிய சாதனையை நிகழ்த்திய மூன்றாவது அணி என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றுள்ளது.
இத்தனை கோடியா?.. ஐபிஎல் 2026 தொடரில் வழங்கப்பட்ட பரிசுத்தொகை விவரம்
Published on

இறுதிப்போட்டியில் குஜராத்தை வீழ்த்தியதன்மூலம் ஐபிஎல் 2026 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத்தை 155 ரன்களுக்கு கட்டுப்படுத்தி அதன்பின் 156 என்ற இலக்கை பெங்களூரு எளிதில் எட்டி வெற்றியை சுவைத்தது.

ஐபிஎல் வரலாற்றில் கடந்த 2025 தொடரில் தான் முதல் முறையாக ஆர்சிபி கோப்பையை வென்றது. தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆர்சிபி கோப்பை வென்றுள்ளது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்குப் பிறகு இந்த அரிய சாதனையை நிகழ்த்திய மூன்றாவது அணி என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் ஆர்சிபி அணிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ ரூ.20 கோடி பரிசுத்தொகையை வழங்கியுள்ளது.

இந்த சீசனுக்காக பிசிசிஐ ஒதுக்கிய மொத்த பரிசுத்தொகை ரூ.46 கோடி ஆகும்.

மறுபுறம், இந்தத் தொடரில் ரன்னர் அப் இடத்தைப் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ரூ.12.50 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது.

மேலும், பிளேஆப் சுற்றுக்குத் தகுதி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த மற்ற இரு அணிகளுக்கும் பிசிசிஐ ரொக்கப் பரிசுகளை வழங்கியுள்ளது.

அதன்படி, குவாலிபையர் 2 போட்டியில் தோல்வியடைந்து மூன்றாவது இடத்தைப் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரூ.7 கோடியும், எலிமினேட்டர் போட்டியில் தோற்று நான்காவது இடத்துடன் வெளியேறிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு ரூ.6.50 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com