

ஐ.பி.எல். 2026 பிளேஆஃப் சுற்றுக்கான நான்கு அணிகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் ஏற்கனவே அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டன.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இறுதியாக டாப் 4 அணிகளில் ஒன்றாக இணைந்தது.
தனது கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெற்ற வெற்றியானது, முன்னதாக இறுதி பிளேஆஃப் இடத்திற்காக போட்டியிட்ட பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளை தொடரில் இருந்து வெளியேற்றியது. இந்த வெற்றியின் மூலம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 போட்டிகளில் 16 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்தது.
ஐபிஎல் 2026 லீக் கட்டத்தின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. இரண்டாம் இடத்தில் இருந்த குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மூன்றாம் இடத்தில் இருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுடன் 18 புள்ளிகளில் சமநிலையில் இருந்தபோதிலும், சிறப்பான ரன் ரேட் விகிதம் ஆர்.சி.பி. அணி முதலிடத்தை பிடிக்க உதவியது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை விட குஜராத் டைட்டன்ஸ் சிறந்த ரன் ரேட் கொண்டிருந்தது, இது ஷுப்மன் கில் தலைமையிலான அணி, பேட் கம்மின்ஸ் மற்றும் அவரது அணியினரை புள்ளிகள் பட்டியலிில் முந்தி செல்ல உதவியது.
ஐபிஎல் 2026 பிளேஆஃப் போட்டிகளின் விவரங்கள்:
தகுதிச்சுற்று 1: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூ vs குஜராத் டைட்டன்ஸ்
தேதி: மே 26 (செவ்வாய்க்கிழமை)
நேரம்: மாலை 7:30 மணி (இந்திய நேரம்)
இடம்: இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானம், தர்மசாலா
எலிமினேட்டர் போட்டி: சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
தேதி: மே 27 (புதன்கிழமை)
நேரம்: மாலை 7:30 மணி (இந்திய நேரம்)
இடம்: மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், முல்லன்பூர், நியூ சண்டிகர்
தகுதிச்சுற்று 2: தகுதிச்சுற்று 1-இல் தோற்ற அணி vs எலிமினேட்டர் சுற்றில் வென்ற அணி
தேதி: மே 29 (வெள்ளிக்கிழமை)
நேரம்: மாலை 7:30 மணி (இந்திய நேரம்)
இடம்: மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், முல்லன்பூர், நியூ சண்டிகர்
இறுதிப் போட்டி: தகுதிச்சுற்று 1 சுற்றில் வென்ற அணி vs தகுதிச்சுற்று 2-இல் வென்ற அணி
தேதி: மே 31 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: மாலை 7:30 மணி (இந்திய நேரம்)
இடம்: நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத்