IPL Update | 2026 ஐ.பி.எல். தொடருக்கான முழு அட்டவணை வெளியீடு

இந்தியா முழுக்க 12 இடங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.
IPL Update | 2026 ஐ.பி.எல். தொடருக்கான முழு அட்டவணை வெளியீடு
Published on

ஐ.பி.எல். தொடரின் 19-வது சீசன் வரும் மார்ச் 28-ம் தேதி தொடங்குகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

2026 ஐ.பி.எல். இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கும் நிலையில், இந்தத் தொடருக்கான இரண்டாம் கட்ட அட்டவணை வெளியாகி இருக்கிறது. இதில் ஏப்ரல் 13-ஆம் தேதி தொடங்கி மே மாதம் 24-ஆம் தேதி வரை நடக்கும் போட்டிகளின் விவரங்கள் இடம்பெற்றுள்ளது.

இந்தப் போட்டிகள் இந்தியா முழுக்க 12 இடங்களில் நடைபெறுகிறது. இவை பெங்களூரு, மும்பை, சென்னை, கொல்கத்தா, டெல்லி, அகமதாபாத், ஐதராபாத், லக்னோ, ஜெய்பூர், தரம்சாலா, ராய்பூர் மர்றும் நியூ சண்டிகர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகிறது.

முன்னதாக பி.சி.சி.ஐ. வெளியிட்ட அட்டவணையில் மார்ச் 28-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12-ஆம் தேதி வரையிலான போட்டிகளின் விவரங்கள் இடம்பெற்று இருந்தன.

2026 ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் முதல் போட்டி ஏப்ரல் 23-ஆம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து சென்னையில் மே 02-ஆம் தேதி நடக்கும் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com