ஐபிஎல் 2024 - ஆயுஷ் பதோனி அதிரடி - 168 ரன்களை இலக்காக நிர்ணயித்தது லக்னோ

கே.எல். ராகுல் 39 ரன்களை குவித்தார்.குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஐபிஎல் 2024 - ஆயுஷ் பதோனி அதிரடி - 168 ரன்களை இலக்காக நிர்ணயித்தது லக்னோ
Published on

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 26 ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. லக்னோவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லாங்கோ அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங்கை தொடங்கிய லக்னோ அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய குவிண்டன் டி காக் மற்றும் கேப்டன் கே.எல். ராகுல் முறையே 19 மற்றும் 39 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 3 ரன்களிலும், மார்கஸ் ஸ்டாயினிஸ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 167 ரன்களை குவித்தது. லக்னோ அணி சார்பில் ஆயுஷ் பதோனி சிறப்பாக ஆடி 34 பந்துகளில் 55 ரன்களை குவித்தார். டெல்லி சார்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இஷாந்த் சர்மா, முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com