பாகிஸ்தான் வீரரின் கேட்சை தவறவிட்ட நெதர்லாந்து வீரரை கடுமையாக திட்டிய இந்திய ரசிகர்கள்

மேக்ஸ் டவுட்டை இணையத்தில் இந்திய ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். நெதர்லாந்து ரசிகர்களை இந்திய ரசிகர்கள் என் மீது கோபமாக இருந்ததாகத் தெரிகிறது
பாகிஸ்தான் வீரரின் கேட்சை தவறவிட்ட நெதர்லாந்து வீரரை கடுமையாக திட்டிய இந்திய ரசிகர்கள்
Published on

டி20 உலகக் கோப்பை இன்று தொடங்கியது. கொழும்பு நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் குரூப் ஏ அணியில் இடம் பிடித்துள்ள பாகிஸ்தான்- நெதர்லாந்து அணிகள் மோதின

டாஸ் வென்ற பாகிஸதான் பந்து வீச்சை தொடங்கியது. அதன்படி நெதர்லாந்து முதலில் பேட்டிங் செய்து 19.5 ஓவரில் 147 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

இதையடுத்து 148 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய பாகிஸ்தான் 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் வெற்றிக்கு 12 பந்துகளில் 29 ரன்கள் தேவை என்ற நிலையில், பகீம் அஷ்ரப் கொடுத்த கேட்ச் வாய்ப்பை நெதர்லாந்து வீரர் மேக்ஸ் டவுட் தவறவிட்டார். அதன் விளைவாக 19 ஆவது ஓவரிலேயே 24 ரன்களை பகீம் அஷ்ரப் விளாசினார். கடைசி ஓவரில் 5 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி வென்றது.

கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 11 பந்துகளில் 29 ரன்கள் குவித்த பகீம் அஷ்ரப் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், பகீம் அஷ்ரப் கொடுத்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்ட மேக்ஸ் டவுட்டை இணையத்தில் இந்திய ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய மேக்ஸ் டவுட், "என்னை பற்றி வந்த சில கருத்துக்கள் மிகவும் கடுமையானவை, யாரிடமும் சொல்லக்கூடாத ஒன்று. நெதர்லாந்து ரசிகர்களை இந்திய ரசிகர்கள் என் மீது கோபமாக இருந்ததாகத் தெரிகிறது" என்று கிண்டலாக தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com