அதையெல்லாம் நம்பாதீங்க.. கோலி குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சகோதரர்

இங்கிலாந்து எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் இருந்து கோலி விலகினார்.கோலி விளையாடததற்கு பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.
அதையெல்லாம் நம்பாதீங்க.. கோலி குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சகோதரர்
Published on

இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போடிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பிடித்திருந்தார்.

முதல் டெஸ்ட் தொடக்குவதற்கு முன்பு அவர் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டார் என தெரிவித்தார். இதனையடுத்து அவரது மனைவி கர்பமாகி உள்ளதால் அவர் விளையாடவில்லை எனவும் ஒருசிலர் அவரது தாயிக்கு உடல் நலம் சரியில்லை எனவும் சமூக வலைதளங்களில் பல்வேறு வந்தந்திகள் பரவி வந்தது.

இந்நிலையில் எங்கள் தாய் உடல் நலத்துடன் உள்ளதாக விராட் கோலியின் சகோதரர் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இது குறித்து விகாஸ் கோலி கூறியதாவது:-

என்னுடைய தாயின் உடல்நிலை குறித்து பரவி வரும் வதந்தியில் உண்மையில்லை. எனது தாய் நலமாக உள்ளார். மக்கள் மற்றும் ஊடகங்கள் இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com