தொடர்ச்சியாக 16 வெற்றி... புதிய சாதனை படைத்து அசத்திய இந்திய அணி

ஐ.சி.சி. நடத்திய உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் இந்தியா தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது.ஆஸ்திரேலியா அணி ஐ.சி.சி. போட்டிகளில் தொடர்ச்சியாக 15 வெற்றியை பெற்று இருந்தது.
தொடர்ச்சியாக 16 வெற்றி... புதிய சாதனை படைத்து அசத்திய இந்திய அணி
Published on

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தியது. உலகக் கோப்பை தொடரில் இந்தியா தொடர்ச்சியாக 11வது வெற்றியை பெற்றது. 9வது வெற்றியை அடைந்த போது இந்தியா சாதனை படைத்து இருந்தது.

இதற்கிடையே பாகிஸ்தானை தோற்கடித்தன் மூலம் இந்தியா புதிய சாதனையை நிகழ்த்தியது. ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) நடத்திய போட்டிகளில் இந்தியா தொடர்ச்சியாக 16வது வெற்றியை பெற்றது.

2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. அதன் பிறகு ஐ.சி.சி. நடத்திய உலகக் கோப்பை, சாம்பியன்ஷிப் டிராபி (டி20, ஒருநாள்) போட்டிகளில் இந்தியா தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது.

இதற்கு முன்பு ஆஸ்திரேலியா 2006ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஐ.சி.சி. போட்டிகளில் தொடர்ச்சியாக 15 வெற்றியை பெற்று இருந்தது. இந்த சாதனையை இந்தியா தற்போது முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது.

இந்திய அணி இதற்கு முன்பு 2012-2014 வரை தொடர்ச்சியாக 12 போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தது. டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 8-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com