சூர்யகுமார், கோலி அசத்தல் - ஹாங்காங்கை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது இந்தியா

முதலில் ஆடிய இந்தியா 2 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது. விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினர்.
விக்கெட் வீழ்த்திய அர்ஷ்தீப் சிங்
விக்கெட் வீழ்த்திய அர்ஷ்தீப் சிங்
Published on

துபாய்:

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் துபாயில் இன்று நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹாங்காங் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ்

68 ரன்களுடனும், விராட் கோலி 59 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். கே.எல்.ராகுல் 36 ரன்னில் ஆட்டமிழந்தார்.

3வது விக்கெட்டுக்கு இணைந்த விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஜோடி 98 ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங்காங் அணி களமிறங்கியது. பாபர் ஹயாத் 41 ரன்னும், கிஞ்சித் ஷா 30 ரன்னும், செஷான் அலி 26 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், ஹாங்காங் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று, சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com