மது அருந்தி வாகனம் ஓட்டிய வார்னர்- கைது செய்த போலீசார்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், சிட்னியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
மது அருந்தி வாகனம் ஓட்டிய வார்னர்- கைது செய்த போலீசார்
Published on

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், சிட்னியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிட்னியின் கிழக்குப்பகுதியில் உள்ள மரூப்ரா என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வார்னரை வழிமறித்து போலீசார் சோதனை செய்தனர். அவர் அனுமதிக்கப்பட்ட அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக மது அருந்தியது (0.104) தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தற்போது வார்னர் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் கராச்சி கிங்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். போட்டிகளுக்கு இடையே கிடைத்த ஒரு வார கால இடைவெளியில் அவர் சிட்னி சென்றிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது.

இந்தத் சட்டப்பூர்வ நடவடிக்கைகளால் அவர் மீண்டும் பாகிஸ்தான் செல்வதில் சிக்கல் இருக்காது என்று தெரிகிறது. ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள அடுத்த போட்டியில் அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com