மகளிர் டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: இங்கிலாந்திடம் போராடி வீழ்ந்தது இந்தியா

ரிச்சா கோஷ் பொறுப்புடனும் அதிரடியாகவும் ஆடி அரை சதம் கடந்தார்.
richa ghosh
Published on

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதான பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் நடந்த பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்தியா வென்றது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற ஒரு பயிற்சி ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. எமி ஜோன்ஸ், நாட் சீவர் பிரண்ட் ஆகியோர் அரை சதம் கடந்தனர். எமி ஜோன்ஸ் 64 ரன்னும், நாட் சீவர் பிரண்ட் 57 ரன்னும் எடுத்தனர். டேனியல் கிப்சன் 30 ரன்னும் எடுத்தார்.

இறுதியில், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய இந்திய அணி முதலில் விக்கெட்டுகளை வேகமாக இழந்தது. 87 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

ரிச்சா கோஷ் பொறுப்புடனும் அதிரடியாகவும் ஆடி அரை சதம் கடந்தார்.

இறுதியில், இந்திய அணி 19.5 ஓவரில் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கடைசி வரை போராடிய ரிச்சா கோஷ் 36 பந்தில் 2 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com