

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணி துவக்க வீரர்களாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 1 ரன்னுக்கு ஆட்டமிழக்க, இவரைத் தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷன் ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிக்கொடுக்க இந்திய அணி தொடக்கத்திலேயே இரு விக்கெட்டுகளை இழந்தது.
மறுப்பக்கம் அபிஷேக் ஷர்மா ஆக்ரோஷமாக ஆடி அரைசதம் கடந்தார். இவர் 24 பந்துகளில் 59 ரன்களை குவித்தார். இவருடன் ஆடிய கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் 47 பந்துக 68 ரன்களை அடித்தார்.
ஷிவம் தூபே தன் பங்கிற்கு 21 பந்துகளில் 42 ரன்களை அடித்தார். இதையடுத்து இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 189 ரன்களை சேர்த்துள்ளது.
இங்கிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஷகிப் மஹ்மூத் 3 விக்கெட்டுகளையும், ஆதில் ரஷீத் மற்றும் சாம் கர்ரன் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.