

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. ஜூலை 01-ஆம் தேதி தொடங்கும் இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது.
மும்முறை உலக சாம்பியனான இந்தியாவை எதிர்கொள்ளும் இங்கிலாந்தின் 17 பேர் கொண்ட டி20 அணியில், அறிமுக வீரரான ஜேம்ஸ் கோல்ஸ் அறிவிக்கப்பட்டார். நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி முழுமையாக நடந்தால், கேப்டன் ஹாரி புரூக் குறுகிய கால அவகாசத்தில் அடுத்த தொடருக்கு திரும்ப வேண்டியிருக்கும்.
இந்தப் போட்டி ஜூன் 25 முதல் 29 வரை நாட்டிங்ஹாமில் நடைபெற உள்ளது. ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணியை இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் எதிர்கொள்கிறது. இதன் தொடக்கப் போட்டி ஜூலை 01-ஆம் தேதியன்று செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் நடைபெற உள்ளது.
தொடர் அட்டவணை:
இந்த டி20 தொடரின் முதலாவது, மூன்றாவது மற்றும் நான்காவது டி20 போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 10:00 மணிக்கும், இரண்டாவது மற்றும் ஐந்தாவது போட்டிகள் மட்டும் இரவு 7:00 மணிக்கும் தொடங்கும்.
முதல் போட்டி ஜூலை 01-ஆம் தேதி நடக்கும் நிலையில், இரண்டாவது டி20 போட்டி ஜூலை 04-ஆம் தேதி மான்செஸ்டரிலும், மூன்றாவது போட்டி ஜூலை 07-ஆம் தேதி நாட்டிங்ஹாமிலும் நடைபெறும். நான்காவது மற்றும் ஐந்தாவது டி20 போட்டிகள் முறையே ஜூலை 09 மற்றும் 11-ஆம் தேதிகளில் பிரிஸ்டல் மற்றும் சவுத்தாம்ப்டனில் நடைபெற இருக்கிறது.
இங்கிலாந்து அணி:
ஹாரி புரூக் (கேப்டன்), ரேஹான் அகமது , ஜோஃப்ரா ஆர்ச்சர் , சோனி பேக்கர் , டாம் பேன்டன் , ஜேக்கப் பெத்தேல் , ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் கோல்ஸ், ஜோர்டான் காக்ஸ் (விக்கெட் கீப்பர்), சாம் கர்ரன் , லியாம் டாசன் , வில் ஜாக்ஸ் , சாகிப் மஹ்மூத் , அடில் ரஷித் , ஜோஷ் டங் மற்றும் லூக் வுட்