IPL 2026 | VIDEO: நோ லுக் ஷாட்... பயிற்சியில் பட்டையை கிளப்பும் பிரெவிஸ்

சிஎஸ்கே அணியின் அதிரடி ஆட்டக்காரரான பிரெவிஸ், வலை பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
IPL 2026 | VIDEO: நோ லுக் ஷாட்... பயிற்சியில் பட்டையை கிளப்பும் பிரெவிஸ்
Published on

ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் வருகிற 28-ந் தேதி தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து வீரர்களும் தீவிர வலைபயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி வீரர்கள் தீவிர வலைபயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றன்றர்.

அந்த வகையில் சிஎஸ்கே அணியின் அதிரடி ஆட்டக்காரரான தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பிரெவிஸ் வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீடியோவை சிஎஸ்கே அணியின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

பயிற்சியில் பிரெவிஸ் நோ லுக் ஷாட்டில் சிக்சர்களை விளாசினார். இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வருகிற 30-ந் தேதி மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com