கே.எல். ராகுலை மரியாதையுடன் நடத்துவோம்.. லக்னோ உரிமையாளரை சீண்டிய டெல்லி ஓனர்

சஞ்சீவ் கோயங்கா கேஎல் ராகுலிடம் கடுமையாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. கே.எல்.ராகுலுக்கு தகுதியான மரியாதையை கொடுப்போம் என்று டெல்லி உரிமையாளர் தெரிவித்தார்.
கே.எல். ராகுலை மரியாதையுடன் நடத்துவோம்.. லக்னோ உரிமையாளரை சீண்டிய டெல்லி ஓனர்
Published on

2024 ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி தோல்வியடைந்தது.

இப்போட்டியின் முடிவுக்கு பின்னர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் கடுமையாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் கேஎல் ராகுலின் ரசிகர்கள் மட்டுமின்றி பல முன்னாள் வீரர்களும் சஞ்சீவ் கோயங்காவின் செயலுக்கு கண்டனங்களை தெரிவித்தனர்.

இதனையடுத்து வரும் ஐபிஎல் தொடரில் லக்னோ அணி கே.எல். ராகுலை தக்க வைக்கவில்லை. இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் கே.எல்.ராகுலை 14 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது.

இதனையடுத்து கே.எல்.ராகுல் குறித்து பேசிய டெல்லி அணி உரிமையாளர் பார்த் ஜிண்டால், "கே.எல். ராகுல் ஒரு தரமான வீரர் என்று நான் நம்புகிறேன். அவரை குறிப்பிட்ட தொகைக்கு (ரூ.14 கோடி) ஏலத்தில் எடுத்தது மற்ற வீரர்களை ஏலத்தில் எடுக்க எங்களுக்கு உதவியது. கே.எல். ராகுலை எனக்கு நீண்ட காலமாக தனிப்பட்ட முறையில் தெரியும். அவர் எனக்கு நல்ல நண்பர்.

அவர் அன்புடனும் மரியாதையுடனும் வளர்ந்துள்ளார். அவருக்குத் தகுதியான அன்பையும் மரியாதையையும் நான் கொடுக்கப் போகிறேன். அவர் டெல்லி அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று தருவார் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கே.எல். ராகுலிடம் கடுமையாக நடந்து கொண்டதை விமர்சிக்கும் தொனியில் டெல்லி அணி உரிமையாளர் பார்த் ஜிண்டால் பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com