சேப்பாக் அணி வெற்றி பெற 139 ரன்களை நிர்ணயித்தது கோவை அணி

மழை காரணமாக போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் ஆடிய கோவை அணி 138 ரன்களை எடுத்தது.
அரை சதமடித்த சாய் சுதர்சன்
அரை சதமடித்த சாய் சுதர்சன்
Published on

கோவை:

6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசும், கோவை கிங்சும் பலப்பரீட்சையில் இறங்கின.

டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 17 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

அதன்படி, முதலில் பேட் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 138 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியின் சாய் கிஷோர் 45 பந்தில் 65 ரன்கள் குவித்தார். கங்கா ஸ்ரீதர் ராஜு 27 ரன்னும், ஷாருக் கான் 20 ரன்னும் எடுத்தனர்.

சேப்பாக் அணி சார்பில் சந்தீப் வாரியர் 4 விக்கெட், சாய் கிஷோர் 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் அணி களமிறங்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com