சேப்பாக்கத்தில் பிக் பாஷ் லீக் போட்டிகள்: அனுமதிக்குமா பிசிசிஐ?

இந்தியாவில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் ஐபிஎல் போட்டிகள் ஆஸ்திரேலிய நேரப்படி நள்ளிரவாகும்.
சேப்பாக்கத்தில் பிக் பாஷ் லீக் போட்டிகள்: அனுமதிக்குமா பிசிசிஐ?
Published on

ஐபிஎல் தொடரின் வெற்றிக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்டது பிக் பாஷ் லீக் தொடர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் லீக் தொடர் போட்டிகளை இந்தியாவில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவுசெய்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முதன்மை மைதானமாக சேப்பாக்கத்தைத் தேர்வு செய்து, டிஎன்சிஏ மற்றும் பிசிசிஐ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக முடிந்துள்ளதாக தெரிகிறது.

ஆனாலும், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அரசு அதிகாரிகள் இடையிலான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

ஆஸ்திரேலிய நேரம் இந்திய நேரத்தை விட 1.5 மணி முதல் 4.5 மணி நேரம் வரை முன்னதாக இருப்பதால், தொலைக்காட்சி ஒளிபரப்புக்கான நேர ஒத்திசைவு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் வழக்கமாக இரவு 7.30 மணிக்கு தொடங்கும் ஐபிஎல் போட்டிகள், ஆஸ்திரேலிய நேரப்படி நள்ளிரவாகும். எனவே, இந்திய நேரப்படி மதியம் நடைபெறும் போட்டிகள் ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு இரவு நேரத்தில் நேரலையாக பார்க்க ஏற்றதாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னைக்கு நேரடி விமான சேவை இல்லாததும் ஒரு சவாலாக பார்க்கப்படுகிறது. தற்போது மெல்போர்ன்-டெல்லி மற்றும் சிட்னி-பெங்களூரு இடையே மட்டுமே நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன.

பிசிசிஐ இறுதி அனுமதி வழங்கினால் சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கு அடுத்ததாக, பிபிஎல் திருவிழாவையும் சென்னை ரசிகர்கள் நேரில் காணும் வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com