IPL 2026 | முக்கிய வேகப்பந்து வீச்சாளர் விலகல்: சி.எஸ்.கே. அணிக்கு பின்னடைவு

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நாதன் எல்லிஸ் அணியில் இருந்து விலகியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
நாதன் எல்லிஸ்
நாதன் எல்லிஸ்
Published on

ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் திருவிழா வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

தொடர் தொடங்க இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிர பயிற்சி மேற்கொள்ள இருக்கிறது. சஞ்சு சாம்சன் இன்று சென்னை வந்துள்ளார். அவர் அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ள இருக்கிறார்.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நாதன் எல்லிஸ் காயம் காரணமாக தொடர் முழுவதிலும் இருந்து விலகியுள்ளார்.

தொடையில் ஏற்பட்ட (hamstring) காயம் காரணமாக விலகியுள்ளார். இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்வடைவாகும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த முறை பேட்டிங்கில் வலிமையாக காணப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com