2026-27-ல் இந்தியாவில் 1788 போட்டிகளை நடத்தும் பி.சி.சி.ஐ.

சீனியர், மகளிர், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் என 1788 போட்டிகளை இந்தியாவில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளனர்.
2026-27-ல் இந்தியாவில் 1788 போட்டிகளை நடத்தும் பி.சி.சி.ஐ.
Published on

கிரிக்கெட்டில் மிகப்பெரிய கட்டமைப்பு கொண்டது இந்திய கிரிக்கெட் கவுன்சில். சர்வதேச கிரிக்கெட் அணிக்கு வீரர்களை தயார் செய்யும் வகையில் உள்நாட்டு கிரிக்கெட்டிற்கு மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

இதில் ரஞ்சி டிராபி, துலீப் டிராபி, சையது முஸ்டாக் அலி தொடர், விஜய் ஹசாரே போன்ற தொடர் இந்திய ஆண்கள் கிரிக்கெட் தொடரில் முக்கியத்துவம் பெற்றது. இதே போன்று மகளிர் கிரிக்கெட்டிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்த நிலையில் 2026-27 சீசனில் இந்திய சீனியர் அணிகளுக்கான போட்டி, மகளிர் கிரிக்கெட், உள்ளூர் கிரிக்கெட் என 1788 போட்டிகளை நடத்த இருக்கிறது.

வலிமையான, போட்டியான உள்ளூர் போட்டியை கட்டமைக்க பிசிசிஐ உறுதிப்பூண்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com