பிசிசிஐ-யிடம் பதவி நீட்டிப்பு கேட்கும் அகர்கர்

2027-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி வரை ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டும் என அவர் கிரிக்கெட் வாரியத்தை வலியுறுத்தியுள்ளார்.
பிசிசிஐ-யிடம் பதவி நீட்டிப்பு கேட்கும் அகர்கர்
Published on

மும்பை:

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக முன்னாள் வீரர் அஜித் அகர்கர் உள்ளார். அவரது பணி காலத்தில் இந்தியா மூன்று ஐ.சி.சி. கோப்பைகளை வென்று வரலாறு படைத்துள்ளது. ஜூன் மாதத்துடன் அவரது பதவி காலம் முடிகிறது. ஆனால் 2027-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி வரை ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டும் என அவர் கிரிக்கெட் வாரியத்தை வலியுறுத்தியுள்ளார்.

அகர்கரின் கோரிக்கை குறித்து பிசிசிஐ அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும், ஆனால் இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருவேளை அகர்கரின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படாவிட்டால், அவருக்குப் பதிலாக மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் ஒருவர் இந்தப் பொறுப்புக்கு வரக்கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com