193 ரன்களை இலக்காக நிர்ணயித்த சென்னை... முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா கொல்கத்தா?

193 ரன்களை இலக்காக கொண்டு பேட்டிங் செய்யவுள்ளது கொல்கத்தா.
193 ரன்களை இலக்காக நிர்ணயித்த சென்னை... முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா கொல்கத்தா?
Published on

2026 ஐ.பி.எல். தொடரின் 22-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே நடைபெற்று வருகிறது.

போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் சென்னை முதலில் பேட்டிங் செய்தது. இன்று பவர்பிளேயில் ரன்களை குவித்த சென்னை, டெத் ஓவர்களில் சொதப்பியது. இறுதியாக 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது.

இதன்மூலம் கொல்கத்தா அணிக்கு 193 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக சஞ்சு 48 ரன்களும், பிரெவிஸ் 41 ரன்களும் குவித்தனர். கொல்கத்தா தரப்பில் கார்த்திக் தியாகி 2 விக்கெட்டுகளும், சுனில் நரைன், அனுகுல் ராய், வைபவ் அரோரா தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

கொல்கத்தா தொடர் தோல்விகளை சந்தித்து வரும்நிலையில் இப்போட்டியில் வெற்றிப்பெற தீவிர ஆர்வம் காட்டும். இதனால் போட்டி விறுவிறுப்பாக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து கொல்கத்தா விளையாட உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com