சதம் விளாசிய அபிஷேக் சர்மா... டெல்லி அணிக்கு 243 ரன்கள் இலக்கு!

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 242 ரன்கள் குவித்துள்ளது.
சதம் விளாசிய அபிஷேக் சர்மா... டெல்லி அணிக்கு 243 ரன்கள் இலக்கு!
Published on

ஐபிஎல் 2026 தொடரின் 31-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதி வருகின்றன. ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

20 ஓவர்களின் முடிவில் ஹைதராபாத் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 242 ரன்கள் குவித்தது. அபிஷேக் சர்மா சதம் விளாசினார். அபிஷேக் சர்மா 135 ரன்கள் குவித்தார். இது நடப்பு சீனனில் தனிநபர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

ஹென்ரிச் கிளாசன், டிராவிஸ் ஹெட் தலா 37 ரன்கள் குவித்தனர். டெல்லி தரப்பில் அக்ஷர் படேல் மட்டும் ஒரேயொரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 243 ரன்களை இலக்காக கொண்டு டெல்லி பேட்டிங் செய்யவுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இவ்விரு அணிகளும் 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 12 வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளன.

மேலும் நடப்பு சீசனில் இதுவரை இரண்டு அணிகளுமே மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றியைப் பதிவு செய்துள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com