இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20: இந்தியா பந்துவீச்சு தேர்வு!

இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20: இந்தியா பந்துவீச்சு தேர்வு!
Published on

இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையிலான 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இதில் செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் நடந்த முதல் போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், மான்செஸ்டரில் நடந்த 2வது போட்டியில் இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

அதனைத்தொடர்ந்து இன்று நாட்டிங்காமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மூன்றாவது போட்டி இரவு 10 மணிக்கு தொடங்கவுள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணியில் இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களம் இறங்குகிறார்கள்.

இப்போட்டியிலும் சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெறவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com