2வது டி20 போட்டி: அயர்லாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு!

தொடரில் 1-0 என்ற கணக்கில் அயர்லாந்து முன்னிலையில் உள்ளது.
2வது டி20 போட்டி: அயர்லாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு!
Published on: 

அயர்லாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதிவருகிறது. முதல் போட்டியில் அயர்லாந்து வென்றநிலையில் இன்று இரண்டாவது போட்டி நடைபெறுகிறது.

பெல்பாஸ்ட் மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணியின் இந்த இரண்டாவது போட்டியிலும் சூர்யவன்ஷி இடம்பெறவில்லை.

தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் அயர்லாந்தும், தொடரை சமன் செய்யவேண்டும் என்ற நோக்கில் இந்தியாவும் விளையாடும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

X

Maalai Malar
www.maalaimalar.com