2026 வார ராசிபலன்- தனுசு, மகரம், கும்பம், மீனம்

குடும்பத்தில் நிம்மதி சந்தோசம் பெருகும்.
weekly rasipalan
வார ராசிபலன்
Published on

தனுசு

ஆதாயமான வாரம். பாக்கியாதிபதி சூரியன் தனது சமசப்தம பார்வையால் ராசியை பார்க்கிறார். ஆன்ம பலம் பெருகும்.பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பிள்ளைகளின் சுப நிகழ்விற்கு எதிர்பார்த்த தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும்.கணவன், மனைவியிடம் இருந்து வந்த பிரச்சினைகள் குறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை தைரியம் கூடும்.திடீர் யோகத்தால் எதிர்பாராத நல்ல நிகழ்வுகள் நடைபெறும். சிறிய உழைப்பு பெரிய லாபத்தை ஈட்டித்தரும். வெளிநாட்டு வேலை முயற்சி கைகூடும்.தாயிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். உயர் கல்வியில் தேர்ச்சி ஏற்பட கடின உழைப்பு தேவை.வீடு, வாகனம் போன்ற சுப விரயங்கள் ஏற்படும். திருமணத்தடை அகலும். குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கடன் வாங்கவும் கூடாது கடன் கொடுக்கவும் கூடாது. கொடுத்த பணம் திரும்பி வராது போகுதல் போன்ற பிரச்சனை இருக்கும்.பௌர்ணமி அன்று விரதம் இருந்து திருச்செந்தூர் முருகனை வழிபடவும்.

மகரம்

மகிழ்ச்சியான வாரம்.ராசிக்கு புதன் குரு சுக்ரனின் சமசப்தம பார்வை உள்ளது. வருமானம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வந்து குவியும்.பங்கு வர்த்தகத்தில் வருமானம் இரட்டிப்பாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும். வேலை பார்க்கும் இடத்தில் சாதகமான சூழல் உண்டாகும். அடமான நகைகள் மீண்டு வரும். இதுவரை தடைபட்ட திருமணம், குழந்தை பாக்கியம் கைகூடும். கணவர் மனைவி உறவு சுமூகமாக இருக்கும். தாய் வழி உறவினர்களால் ஆதாயங்கள் இருக்கும். சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்து சென்ற உறவுகளின் வருகை ஆனந்தத்தை அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி சந்தோசம் பெருகும். திறமைக்கும், தகுதிக்கும் தகுந்த கவுரவப் பதவிகள் கிடைக்கும்.உங்களின் நற்குணங்களால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். எதிரிகளின் சூழ்ச்சிகளை அழித்து தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். முன் கோபத்தைக் குறைந்து எதிலும் நிதானமாக செயல்பட வெற்றி உண்டாகும். தினமும் ஸ்ரீ ருத்ரம் கேட்பது நல்லது.

கும்பம்

பொருளாதார மேன்மை உண்டாகும் வாரம்.பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிக்கிறார்.திட்டங்களில் நிலவிய தடை, தாமதங்கள் அகலும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.நல்ல மாற்றங்கள் வந்து சேரும். திடீர் அதிர்ஷ்டம், கவுரவப் பதவிகள், மூதாதையர் சொத்துக்கள் கிடைக்கும். தாய் வழிச் சொத்தை பிரிப்பதில் இருந்த குறுக்கீடுகள் அகலும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். திருமணம் மற்றும் மேற்படிப்பு முயற்சிகள் சித்திக்கும். பெண்களுக்கு தாய் மற்றும் சகோதர வழி அன்பு ஆறுதலாக இருக்கும்.வீடு கட்டும் பணி துரிதமாகும். நோய் தொல்லை கட்டுக்குள் இருக்கும். பொய்யான கெட்ட வதந்ததிகளால் ஏற்பட்ட மன வருத்தம் நீங்கும். பயணங்கள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும் கொடுத்த வாக்கை காப்பாற்றி வம்பு வழக்கிலிருந்து விடுபடுவீர்கள். ஆன்மீக சுற்றுலா சென்று வருவீர்கள் பவுர்ணமி அன்று விரதம் இருந்து குலதெய்வத்தை வழிபட ஜென்ம ராகுவால் ஏற்படும் தாக்கம் குறையும்.

மீனம்

சோதனைகள் சாதனைகளாக மாறும் வாரம். ராசிக்கு குரு பார்வை இருப்பதால் ஜென்ம சனியால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறையும். இறைவழிபாட்டில் ஆர்வம் கூடும். சிலர் சொத்துக்களை விற்று கடன்களை அடைக்கலாம்.சிலர் சொத்துக்களை அடமான வைத்து கடன் பெறலாம். அதிகப்படியான புதிய தொழில் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பண விஷயத்தில் மிகவும் விழிப்புடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் மங்களகரமான சுப நிகழ்வுகள் கைகூடும். குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் நீங்கி குதூகலம் உருவாகும். புத்திர பாக்கியம் உண்டாகும். நண்பர்களின் ஆதரவால் தடைப்பட்ட செயல்கள் கைகூடும். காணாமல் போன, கைமறதியாக வைத்த பொருட்கள் திரும்ப கிடைக்கும். வேலை யில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.அரசு சார்ந்த துறைகளால் ஆதாயம் உண்டு. ஜென்மச் சனியால் ஏற்படும் சோதனைகளை சாதனைகளாக மாற்ற காக்கைக்கு எள் கலந்த சாதம் மற்றும் தண்ணீர் வைக்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com