

சுபமான வாரம்.ராசி அதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் ஜாதகருக்கு எண்ணங்கள் கனவுகள் லட்சியங்கள் அனைத்தும் ஈடேறும்.ஆயுள், ஆரோக்கியம் தொடர்பான பயம் விலகும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும்.திறமை மற்றும் புத்திக்கூர்மையுடன் செயல்பட்டு சிறப்பும் பெருமையும் அடைவீர்கள்.தொழில் தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் நட்பு, புரிதல் ஆழமாகும்.பிள்ளைகள் கல்வி,தொழில், உத்தியோகத்திற்காக இடம் பெயறுவார்கள். கோர்ட், கேஸ் பிரச்சனையில் இழுபறியான நிலை நிலவும்.வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் சிறு சுணக்கம் உண்டாகும். திருமணத் தடை நீடிக்கும்.பொறுமை பல வெற்றிகளை பெற்றுத் தரும். முக்கிய குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பவுர்ணமி அன்று சிவ வழிபாடு செய்யவும்.
எண்ணற்ற புதிய வாய்ப்புகள் தேடி வரும் வாரம். ராசி அதிபதி புதன் 11-ம்மிடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். செல்வாக்கு திறமைகளின் மூலம் பணியில் பொறுப்புகள் உயரும். பொருளாதாரம் சீராக இருக்கும். வரவிற்கு ஏற்ற செலவும் உண்டு. வீடு, வாகன வசதிகள் மேம்படும். புதிய பொருட்களின் சேர்க்கை மகிழ்ச்சி தரும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் ஒன்றுகூடி மகிழ்வீர்கள். குழந்தை இல்லாதவர் களுக்கு வாரிசு உண்டாகும். சத்ருக்கள் தொல்லை அகலும். தொழில்மேன்மை, காரிய சித்தி, முன்னேற்றம் போன்ற சுப பலன்கள் நடக்கும். விரும்பிய அரசாங்க பணிக்கு சாதகமான சூழல் உள்ளது. உறவினர்களின் மூலம் ஆதரவான சூழல் ஏற்படும். பெண் குழந்தைகளுக்கு காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, போன்ற சுபச் செலவு ஏற்படலாம். பொதுநலச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு பெயர், புகழ் பரவும். பவுர்ணமி அன்று மகாவிஷ்ணு வழிபாடு செய்யவும்.
சிந்தனைகளின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும் வாரம்.ராசி அதிபதி சுக்ரன் 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதன் குருவுடன் சேர்ந்து சஞ்சரிக்கிறார். புதிய தெளிவான சிந்தனைகளின் மூலம் முடிவுகளை எடுப்பீர்கள். இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். லட்சியத்தை அடைய அதிகம் உழைக்க நேரும். செய்தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தாய் மாமன் உறவுகளால் அனுகூலம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பெரும் புள்ளிகளின் அறிமுகத்தால் நன்மைகள் கூடும். புதிய வீடு கட்டி குடியேறுவீர்கள். மறு திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும்.தொழில் நிமித்தமாக பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவார்கள்.சில முக்கிய சம்பவங்கள் பாதகமாக இருப்பது போல் தோன்றினாலும் முடிவில் நன்மையாகவே இருக்கும். புதிய முடிவுகளை எடுக்கும் முன்பு பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்கவும். பாக்கிய பலன்களை அதிகரிக்க பவுர்ணமி அன்று பிரம்மாவை வழிபடவும்.
நன்மைகளே மிகுதியாக நடக்கும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் சம சப்தம பார்வையால் தன் வீட்டை தானே பார்க்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு புதன் சுக்ரன் சேர்க்கை உள்ளதால் நம்பிக்கை அதிகரிக்கும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும்.ஆன்மீக வழிபாட்டில் மனம் ஈடுபடும். மலைபோல் வந்த துன்பம் பனி போல விலகும். தந்தைவழி சொத்துக்களில் நிலவி வந்த சிக்கல்கள் நீங்கும். குடும்பபெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். புதிய வியாபார தொடர்புகள் மூலம் வருமானம் பெருகி வாழ்க்கை வளமாகும். குடும்ப வெளிவட்டாரங்களில் மரியாதை உயரும். மேலதிகாரியின் ஆதரவால் பணியில் முன்னேற்றங் களைக் காண்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். விரும்பிய கடன் அல்லது உதவித் தொகை தேடி வரும். மாணவர்கள் கல்வி தொடர்பான முயற்சியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திருமணத் தடை அகலும். ஆரோக்கியம் சீராகும்.வீடு, மனை பற்றிய நீண்ட நாள் கனவுகளும் முயற்சிகளும் நிறைவேறும். பவுர்ணமி அன்று விரதம் இருந்து புவனேஸ்வரியை வழிபடவும்.