2026 வார ராசிபலன்- மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்

நிலையற்ற வருமானத்தில் தள்ளாடிய குடும்பம் நிலையான வருமானத்தில் தலை நிமிர்ந்து நிற்கும்.
weekly rasipalan
வார ராசிபலன்
Published on

மேஷம்

சிறப்பான வாரம். பூர்வ புண்ணிய அதிபதி சூரியன் சகாய ஸ்தானம் செல்வதால் செயல்களில் கீர்த்தி, புகழ், பெருமை வெற்றி மிளிரும். சகோதர சகாயம் உண்டாகும். பூர்வீகச் சொத்துக்கள் மீதான பிரச்சினைகள் முற்றுப்புள்ளியாகி சொத்துக்கள் உங்கள் பெயருக்கு மாற்றலாகும். எதிர்ப்பார்த்த இடமாற்றம் கிடைத்து குடும்பத்துடன் சேர்ந்து வாழும் வாய்ப்புள்ளது. சிலருக்கு தகுதிக்கு மீறிய பதவி கிடைக்கும். தொழில், உத்தியோகம் என மாறி மாறி காலத்தை கடத்தியவர்களுக்கு நிலையான வேலை கிடைக்கும். தங்கு தடையில்லாத பணவரவு ஏதாவது ஒரு ரூபத்தில் இருந்து கொண்டே இருக்கும்.நிலையற்ற வருமானத்தில் தள்ளாடிய குடும்பம் நிலையான வருமானத்தில் தலை நிமிர்ந்து நிற்கும். 29.6.2026 அன்று நள்ளிரவு 1.09 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய ஆவணங்களையும் பணத்தையும் கவனமாக கையாள வேண்டும். உணவு கட்டுப்பாடு தேவை. மன அமைதியையும், ஆனந்தத்தையும் அதிகரிக்க பவுர்ணமி அன்று முருகன் வழிபாடு செய்யவும்.

ரிஷபம்

திடமான நம்பிக்கையும், தெம்பும், உற்சாகமும் உண்டாகும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் வெற்றி ஸ்தானத்தில் குருவுடன் சஞ்சரிக்கிறார். எடுக்கப்பட்ட முயற்சிக்கான முழு பலனும் அங்கீகாரமும், வெற்றியும் உண்டு.தேவையற்ற அலைச்சல், டென்ஷன் விலகி சகல விதமான மாற்றங்களும் ஏற்படும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை விரிவு படுத்துவீர்கள். புதிய அசையும், அசையாச் சொத்துக்கள் சேரும். அரசு உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வை சந்திக்கலாம். பொருளாதார ரீதியாக சாதகமான பலன்கள் உண்டு. திருமண முயற்சிகள் வெற்றிதரும். தம்பதிகள் மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்துவார்கள்.கண்திருஷ்டி பாதிப்பு அகலும்.உடல் நலனில் ஏற்பட்ட பாதிப்பு குறையும்.29.6.2026 அன்று நள்ளிரவு 1.09 மணி முதல் 1.7.2026 அன்று பகல் 1.31 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சில மனசஞ்சலங்கள், இனம் புரியாத கவலை ஏற்படலாம். உடல் சோர்வால் சுறுசுறுப்பு குறையும்.யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.நாளும் சுப பலன்களை அதிகரிக்க பவுர்ணமி அன்று ஆஞ்சநேயரை வழிபடவும்.

மிதுனம்

முழுமையான அனுகூலம் கிடைக்கும் வாரம். 3-ம் அதிபதி சூரியன் ராசியில் சஞ்சரிப்பதால் குண மேன்மை, செயல்திறன், தன் நம்பிக்கை கூடும். வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய நோயால் இன்னல் அனுபவித்தவர்களுக்கு புத்தொளியும், உடல்பொலிவும் உண்டாகும்.தடைப்பட்ட பாக்கிகள் வசூலாகும். பழைய கடன்களையும், சிக்கல்களையும் தீர்க்கும் நிலை உருவாகும். திருமணம், குழந்தைப்பேறு வீடு, வாகனம் போன்ற சுப மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உடன் பிறந்தவர்களுடன் நிலவிய பனிப்போர் விலகும். நாணயம் நீடிக்கும்.மாணவர்களுக்கு உயர் கல்வி யோகம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு பொதுஜன ஆதரவு அதிகரிக்கும். சிலர் அடுக்கு மாடி வீடு கட்டுவீர்கள். 1.7.2026 அன்று பகல் 1.31 மணி முதல் 3.7.2026 அன்று நள்ளிரவு 12.48 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சரியான நேரத்திற்கு உணவு சாப்பிட முடியாமல் வேலைப்பளு இருக்கும்.காதல் விவகாரங்கள் உண்மையையும், மாயையையும் புரிய வைக்கும். பேச்சில் நிதானமும் பொறுமையும் தேவை. பவுர்ணமி அன்று சத்திய நாராயணரை வழிபடவும்.

கடகம்

புதிய அனுபவம் உண்டாகும் வாரம். தனம் வாக்குக் குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனினும் ராசியில் குரு புதன் சுக்கிரன் என சுப கிரகங்களின் சேர்க்கை இருப்பதால் பெரிய பாதகம் ஏற்படாது என்பதை உறுதியாக கூறலாம்.மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் சுப விரயங்கள் நடக்கும் தெய்வ சிந்தனை, நம்பிக்கை, பலம், தைரியம் அதிகரிக்கும்.நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும். பணவசதி கூடும். உங்கள் தாய் மாமா அல்லது தாத்தா உங்களுக்கு உதவலாம். மிக்க மகிழ்ச்சியான செய்திகளை பிள்ளைகள் கொண்டு வருவார்கள். எதிரிகள் தொல்லை நீங்கும். உங்களை வாட்டிய கடன் பிரச்சினையிலிருந்து மீளக்கூடிய மார்க்கம் தெரியும். வயது முதிர்ந்தவர்களுக்கு முழங்கால் வலி, மூட்டு வலி போன்ற உடல் உபாதைகள் கட்டுக்குள் இருக்கும். மருமகனால் ஏற்பட்ட மனக்கவலை அகலும். திருமணப் பேச்சு வார்த்தை சுபமாக முடியும்.3.7.2026 அன்று நள்ளிரவு 12.48 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். பவுர்ணமி அன்று விரதம் இருந்து அம்மன் வழிபாடு செய்யவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com