2026 வார ராசிபலன்- மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்

குழந்தைகளின் செயல்பாடுகள் மனதிருப்தியைத் தரும்.
weekly rasipalan
2026 வார ராசிபலன்
Published on

மேஷம்

நெருக்கடிகள் விலகும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சிந்தனைகள் பெருகும். முயற்சி ஸ்தானம் பலம் பெறுவதால் இதுவரை சாதிக்க துடித்த விசயங்களை சாதிக்கும் துணிவும், சந்தர்ப்பமும் உருவாகும். எவராலும் சாதிக்க முடியாத செயல்களை செய்து முடிப்பீர்கள். வியாபார பங்காளிகளிடம் நிலவிய மனக்கசப்பு மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலன் காண்பார்கள். குழந்தைகளின் செயல்பாடுகள் மனதிருப்தியைத் தரும். திருமண நிச்சயதார்த்தம் நடக்கும். சொத்துகள் சேரும். உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைப்பேறு, திருமணம் போன்ற பாக்கிய பலன்கள் கைகூடும்.தெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும். 26.6.2026 பகல் 12.33 முதல் 29.6.2026 நள்ளிரவு 1.09 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. செவ்வாய் கிழமை உடல் ஊனமுற்றவர்களுக்கு இயன்ற உதவிகள் செய்யவும்.

ரிஷபம்

தேவைகள் நிறைவேறும் வாரம். ராசியில் 7, 12 ம் அதிபதி செவ்வாய் சஞ்சரிக்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். தம்பதிகளிடம் மகிழ்ச்சி அதிகரிக்கும். லாப ஸ்தான சனியால் பணம் பல வழிகளில் தேடி வரும். அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். வாக்கு வன்மையால் புகழ் பெறுவீர்கள். சமுதாயத்தில் கவுரவமான நிலையை அடைவீர்கள். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். இடமாற்றங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் தகுதி திறமைக்கு ஏற்ற உயர்வு கிடைக்கும். சிலருக்கு அரசு உத்தியோக வாய்ப்பு உள்ளது. மகிழ்ச்சியான நல்ல சம்பவங்கள் நடக்கும். உங்களது கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்காது. வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றிதரும். நல்ல தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். வெள்ளிக்கிழமை உச்சிஷ்ட மஹா கணபதியை வழிபடவும்.

மிதுனம்

திறமைகள் வெளிப்படும் வாரம். ராசி அதிபதி புதன் தனம் வாக்குக் குடும்ப ஸ்தானம் செல்கிறார். அங்கு உச்சம் பெற்ற குருவுடன் இணைகிறார். வெளியில் தெரியாமல் புதைந்து கிடந்த அனைத்து திறமைகளும் வெளிப்படும். அஞ்சாமல் தைரியமாக எல்லா முயற்சியிலும் ஈடுபடுவீர்கள். உடன் பிறப்புகளிடையே ஒற்றுமை கூடும். சுப விரயங்கள் அதிகரிக்கும். பணிபுரியும் பெண்கள் கடமை உணர்வுடன் செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். ஒளிமயமான எதிர்காலம் உருவாகும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் உண்டாகும். வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அசையும், அசையாச் சொத்துக்களால் மேன்மை அடைவீர்கள். புதிய எதிர்பாலின நட்பு கிடைக்கும். மற்றவர்களுக்கு ஜாமீன் பொறுப்பு ஏற்பதை தவிர்க்கவும். செலவை குறைத்து சேமிப்பை அதிகரிக்க ஒளிமயமான எதிர்காலம் உண்டாகும். நோய்க்கான சிகிச்சை பலன் தந்து மன அமைதி கூடும். புண்ணிய யாத்திரைகள் சென்று வருவீர்கள். புதன்கிழமை கற்பக விநாயகரை வழிபடவும்.

கடகம்

சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டிய வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் 12ம்மிடமான விரய ஸ்தானத்தில் விரயாதிபதி புதனுடன் சேர்க்கை பெற்றுள்ளார். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். நேரத்திற்கு உண்ண, உறங்க முடியாமல் உழைக்க நேரும். சில எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையலாம். அதிர்ஷ்டப் பொருட்களை வாங்கி குவித்து ஏமாறுவீர்கள். அநாவசிய ஆடம்பர செலவு செய்துவிட்டு பின்னர் சேமிப்பை பற்றி சிந்திப்பீர்கள். வருமானம் சீராக இருந்தாலும் சமாளிக்க முடியாத விரயங்களும் ஏற்படலாம்.சேமிக்க முடியவில்லை என்ற ஆதங்கம் மனதை வாட்டும். கணவன் மனைவி உறவில் கருத்து வேறுபாடு தோன்றும். தேவையற்ற கோபமும் முயற்சியில் தடை, தாமதம் உண்டாகும். சகோதர வழியில் சொத்து தொடர்பான வில்லங்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் செயல்பாடுகளில் மந்த நிலையும் மெத்தன போக்கும் ஏற்படும். காது நரம்பு தொடர்பான சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். ராசியில் உச்ச குரு இருப்பதால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது என்பதை திட்டவட்டமாக கூறலாம். தினமும் மாலை பிரதோஷ காலத்தில் சரபேஸ்வரரை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com