ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் தொடங்கியது

இந்த உற்சவம் வருகிற ஜூன் 4-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. வசந்த உற்சவத்தின் 9 நாட்களும் மஞ்சள் பொடியினை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி நடைபெறும்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் தொடங்கியது
Published on

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் தொடங்கியது. இந்த உற்சவம் வருகிற ஜூன் 4-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. வசந்த உற்சவத்தின் முதல் நாளில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்.

அங்கு அலங்காரம், அமுது செய்து சூர்ணாபிஷேகம் கண்டருளினார். பின்னர் வசந்த மண்டபத்தில் இருந்து மூலஸ்தானம் சென்றடைந்தார். வசந்த உற்சவத்தின் 7-ம் நாளன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளுகிறார். 9-ம் நாளன்று நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார்.

மேலும் தீர்த்தவாரி மற்றும் திருமஞ்சனம் கண்டருளுகிறார். வசந்த உற்சவத்தின்போது 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும் மஞ்சள் பொடியினை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நடைபெறும். நம்பெருமாள் வசந்த உற்சவ நாட்களில் இரவு 8 மணிக்கு பிறகு ஆரியப்பட்டாள் வாசலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com