வசந்த உற்சவம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினார்

அலங்காரம், அமுது செய்து சூர்ணாபிஷேகம் கண்டருளினார்.நாளை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார்.
நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளியதை படத்தில் காணலாம்.
நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளியதை படத்தில் காணலாம்.
Published on

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் கடந்த 28-ந்தேதி தொடங்கியது. இந்த உற்சவம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது. வசந்த உற்சவ நாட்களில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு, வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்தார். அங்கு அலங்காரம், அமுது செய்து சூர்ணாபிஷேகம் கண்டருளினார். பின்னர் வசந்த மண்டபத்தில் இருந்து இரவில் புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

வசந்த உற்சவத்தின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு கோவில் கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு வசந்த மண்டபம் சென்றடைந்தார். அங்கு அலங்காரம், அமுது செய்து சூர்ணாபிஷேகம் கண்டருளுளினார். பின்னர் வசந்த மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் இரவு 9 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

வசந்த உற்சவத்தின் 9-ம் நாளான நாளை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். தீர்த்தவாரி மற்றும் திருமஞ்சனம் கண்டருளுவார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com