உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் இன்று தெப்ப உற்சவம்: நாளை பந்தக்காட்சி

இன்று மாலை 5.15 மணிக்கு தாயார் தெப்ப மண்டபம் வந்தடைடுகிறார்.நாளை தீர்த்தவாரி கண்டருளி தெப்ப மண்டபம் சேருகிறார்.
உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் இன்று தெப்ப உற்சவம்: நாளை பந்தக்காட்சி
Published on

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்பத்திருவிழா கடந்த 12-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி தினமும் மாலை 6 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தெப்ப மண்டபம் சேர்ந்தடைந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இன்று மாலை 5 மணி அளவில் தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.15 மணிக்கு தெப்ப மண்டபம் வந்தடைடுகிறார்.

மாலை 5.30 மணி முதல் மாலை 6.30 மணி முடிய அலங்காரம் அமுது, தீர்த்த கோஷ்டி நடைபெறும். அதன்பிறகு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கோவில் தெப்பத்தில் இரவு 7 மணி முதல் 8 மணி வரை நாச்சியார் தெப்பம் கண்டருளுகிறார். இரவு 9 மணிக்கு தெப்ப மண்டபத்தில் இருந்து ஆளும் பல்லக்கில் புறப்பட்டு திருவீதி வலம் வந்து, இரவு 10.15 மணி அளவில் மூலஸ்தானம் சேருகிறார்.

இதைத்தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளி தெப்ப மண்டபம் சேருகிறார். அங்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. பின்னர் இரவு 9 மணிக்கு ஆளும் பல்லக்கில் தாயார் புறப்பட்டு பந்தக்காட்சியுடன் வீதி உலா வந்து மண்டபம் சேருகிறார். இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com