இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 6 ஏப்ரல் 2025

இன்று ஸ்ரீ ராமநவமி. அயோத்தி ஸ்ரீ ராம் லல்லாவுக்கு சிறப்பு திருமஞ்சனம்.
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 6 ஏப்ரல் 2025
Published on

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு பங்குனி-23 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: நவமி நள்ளிரவு 12.25 மணி வரை பிறகு தசமி

நட்சத்திரம்: புனர்பூசம் காலை 10.31 மணி வரை பிறகு பூசம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

இன்று ஸ்ரீ ராமநவமி. அயோத்தி ஸ்ரீ ராம் லல்லாவுக்கு சிறப்பு திருமஞ்சனம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம். பத்ரா சலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. தாயமங்கலம் ஸ்ரீ முத்து மாரியம்மன் ரதோற்சவம். பழனி ஸ்ரீ ஆண்டவர் காமதேனு வாகனத்தில் பவனி. சென்னை ஸ்ரீ மல்லீஸ்வரர் புறப்பாடு. கங்கைகொண்டான் ஸ்ரீ வைகுண்டபதி கருட வாகனத்தில் பவனி. சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராய ணருக்கு காலையில் திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், இருக்கண்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் பால் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-உயர்வு

ரிஷபம்-சுபம்

மிதுனம்-அன்பு

கடகம்-நட்பு

சிம்மம்-அமைதி

கன்னி-புகழ்

துலாம்- ஆதரவு

விருச்சிகம்-ஜெயம்

தனுசு- நிறைவு

மகரம்-திறமை

கும்பம்-முயற்சி

மீனம்-பாசம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com